பொறியாளர் கமலக்கண்ணன் எனக்கு அண்ணன் போல.. அவர் நல்லவர்.. புகாரை திரும்ப பெற்றார் சென்னை பெண்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மாசம் 78 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கறேன்.. உனக்கு ஓகேவா… ஏன்னா, உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சு.. நான் சொல்றது அர்த்தம் புரியுதா” என்று போனில் வழிந்ததாக மாநகராட்சி உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மீது இளம்பெண் புகார் தந்தார்.. ஆனால் தற்போது அப்படி புகாரை வாபஸ் பெற்றுவிட்டாராம்.. “கமலக்கண்ணன் அண்ணன் ரொம்ப நல்லவர்” என்றும் சொல்லி உள்ளார் இளம்பெண்!

யாரை எப்போ கொரோனா வந்து தூக்கிட்டு போயிடும் என்று தெரியாமல் இருக்கிறோம்.. யார் கையிலும் காசு இல்லை.. இந்த கொரோனா எப்போ போய் ஒழியும் என்றும் தெரியல.. அதுவும் சென்னைவாசிகள் நிலைமை கொடுமையோ கொடுமை.. பீதியில் இருக்கிறார்கள்.

இந்த தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.. இதனால், வீடுகள்தோறும் கணக்கு எடுக்கும் பணிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் தன்னார்வலர்கள் போல் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்… இவர்களுக்கு முதலில் நாம் பாராட்டை தெரிவித்தாக வேண்டும்.

ஆனால், இவர்களிடமே கிளுகிளுப்பு வேலையில் ஈடுபடும்போது, மக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டுவிடுகிறது. 2 நாளைக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது.. சென்னை மண்ணடி தம்புச்செட்டி தெருவில் உள்ள மாநகராட்சி ஆபீசில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வரும் கமலக்கண்ணன் என்பவர், தனக்கு கீழே தன்னார்வ பணியில் ஈடுபட்டு வரும் கல்லூரி மாணவிக்கு போனில் பாலியல் தொல்லை தந்ததாக கூறப்பட்டது.

imageவள்ளுவர் கோட்டம் ரோட்டில்.. ராத்திரி கஸ்டமர்களுக்காக காத்திருந்த 19 வயசு திருநங்கை.. திடீர் தற்கொலை

பிறகு அவர் பேசிய ஆடியோ ஒன்றும் வெளியானது.. அந்த ஆடியோவில், “மாசம் 78 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கறேன்.. உனக்கு ஓகேவா… ஏன்னா, உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சு.. நான் சொல்றது அர்த்தம் புரியுதா” என்று பேசியுள்ளார். தொடர்ந்து இப்படி தொல்லை தரவும், சம்பந்தப்பட்ட பெண், அந்த ஆடியோவை ரிக்கார்ட் செய்து, சென்னை கமிஷனரிடம் புகாராக தந்ததாகவும், பாதுகாப்புக்காக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடமும் புகார் தந்ததாகவும் கூறப்பட்டது.

மேலும் கமலக்கண்ணனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட போலீசார் அவர் தலைமறைவாக இருந்தால், போட்டோவையும் வெளியிட்டு தேடி வருவதாக சொன்னார்கள்.. ஆனால், இப்போது என்ன ஆனது தெரியவில்லை.. திடீரென அந்த பெண் புகாரை வாபஸ் பெற்றுவிட்டாராம்.. ஆயிரம் விளக்கில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு காவல் கண்காணிப்பளரை வழக்கறிஞர் சிலருடன் சென்று சம்பந்தப்பட்ட மாணவி சந்தித்து ஒரு மனு தந்துள்ளார்.

அந்த மனுவில், கமலக்கண்ணன் தனக்கு அண்ணன் போன்றவர் தன்னிடம் தப்பா எதுவும் பேசவில்லை. என் எதிர்கால வாழ்க்கை, படிப்புக்கு ஆலோசனை மட்டுமே தந்தார்.. என் செல்போனில் இருந்து குரல் பதிவை யாரோ திருடி வெளியிட்டு விட்டனர் என்று எழுத்து மூலமாகவோ, வாய் மொழியாகவோ தான் எந்த புகாரும் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/college-girl-withdraws-her-sexual-complaint-in-chennai-391029.html