கொரோனாவில் இருந்து விரைவில் மீள்கிறது சென்னை.. மண்டல வாரியான பட்டியலை நீங்களே பாருங்கள்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனா தொற்றில் இருந்து விரைவில் மீளப்போகிறது சென்னை. உண்மை தான் மற்ற ஊர்களில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் சென்னையில் வேகமாக குறைந்து வருகிறது. சென்னையில் தற்போதைய நிலையில வெறும் 15 ஆயிரம் ஆக்டிவ் நோயாளிகள் தான் உள்ளனர்.

தமிழகத்தில் தற்போது மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் (நேற்று) சுமார் 4500 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆனால் சென்னையில் நேற்று ஆயிரம் பேருக்கு தான் தொற்று பாதித்து இருந்தது. தமிழகத்தின் பிற பகுதிகளில் தான் கடுமையாக அதிகரித்து இருந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது.

imageகோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி

குணம் அடைவோர் அதிகம்

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், குணமடைவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது. மரணம் அடைவோர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. சென்னையில் இதுவரை எவ்வளவு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். எவ்வளவு பேர் இன்னும் நோயாளிகளாக உள்ளனர். மரணம் அடைந்தவர்கள் விவரம், பரிசோனைகள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

குறைந்த ஆக்டிவ் நோயாளிகள்

சென்னை மாநகராட்சி வெளியிட்ட தகவலின் படி,. இதுவரை சென்னையில் 79,662 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 62,552 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டனர். 1,295 பேர் உயிரிழந்துவிட்டனர். தற்போது வெறும் 15,814 ஆக்டிவ் நோயாளிகள் சென்னையில் இருக்கிறார்கள். சென்னையில் 14ம் தேதியான நேற்று மட்டும் 9,483 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவது 30 முதல் 39 வயதுக்கு உட்டவர்கள் தான்.அதற்கு அடுத்த இடத்தில் 40 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் உள்ளனர்.

திருவெற்றியூர் விவரம்

சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை இப்போது பார்ப்போம். திருவெற்றியூர் மண்டலத்தில் 2355 பேர் குணம் அடைந்துவிட்டனர். தற்போது 608 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இங்கு 70 பேர் இதுவரை இறந்துள்ளனர். மணலி மண்டலத்தில் 1151 பேர் குணம் அடைந்துவிட்டனர். 280 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். மணலியில் இதுவரை 16 பேர் தொற்றால் இறந்துள்ளனர்

தண்டையார் பேட்டையில்

மாதவரம் மண்டலத்தில் 2034 பேர் குணம் அடைந்துவிட்டனர். தற்போது 438 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இங்கு 32 பேர் இதுவரை இறந்துள்ளனர். தண்டையார் பேட்டை மண்டலத்தில் 7252 பேர் குணம் அடைந்துவிட்டனர். தற்போது 1006 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இங்கு 181 பேர் இதுவரை இறந்துள்ளனர். ராயபுரம் மண்டலத்தில் 8455 பேர் குணம் அடைந்துவிட்டனர். தற்போது 1214 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இங்கு 171 பேர் இதுவரை இறந்துள்ளனர்.

அண்ணா நகரில் குறைந்தது

திருவிநகர் மண்டலத்தில் 5110 பேர் குணம் அடைந்துவிட்டனர். தற்போது 998 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இங்கு 132 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். அம்பத்தூர் மண்டலத்தில் 2855 பேர் குணம் அடைந்துவிட்டனர். தற்போது 943 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இங்கு 46 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். அண்ணா நகர் மண்டலத்தில் 7107 பேர் குணம் அடைந்துவிட்டனர். தற்போது 1560பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இங்கு 122 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

கோடம்பாக்கம் அதிகம் பேர்

தேனாம்பேட்டை மண்டலத்தில் 7177 பேர் குணம் அடைந்துவிட்டனர். தற்போது 1497 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இங்கு 197 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 6569 பேர் குணம் அடைந்துவிட்டனர். தற்போது 2199 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இங்கு 136 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். வளசரவாக்கம் மண்டலத்தில் 3040 பேர் குணம் அடைந்துவிட்டனர். தற்போது 914 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இங்கு 39 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

அடையாறு நிலவரம் என்ன

ஆலந்தூர் மண்டலத்தில் 1670 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துவிட்டனர். தற்போது 508 பேர் தொற்று பாதிப்புடன் சிசிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு 28 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அடையாறு மண்டலத்தில் 3956 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துவிட்டனர். தற்போது 1164 பேர் தொற்று பாதிப்புடன் சிசிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு 73 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சோழிங்கநல்லூர் விவரம்

பெருங்குடி மண்டலத்தில் 1678 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துவிட்டனர். தற்போது 353 பேர் தொற்று பாதிப்புடன் சிசிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு 28 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 1307 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துவிட்டனர். தற்போது 464 பேர் தொற்று பாதிப்புடன் சிசிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு 11 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 836 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துவிட்டனர். தற்போது 1668 பேர் தொற்று பாதிப்புடன் சிசிச்சை பெற்று வருகிறார்கள். பிறமாவட்டத்தினர் 13 பேர் கொரோனா தொற்றால் சென்னையில் உயிரிழந்துள்ளனர்.

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-recover-soon-from-covid-see-the-zone-wise-active-cases-list-391424.html