கோவிட்-19: மீண்டும் நடைமுறைக்கு வந்த ரேபிட் டெஸ்ட்… சென்னை மாநகராட்சி நடவடிக்கை! – Vikatan

சென்னைச் செய்திகள்

இது தவிர நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு பரிந்துரைத்துள்ள ஆர்சனிகம் ஆல்பம் என்ற மருந்தும் ஊழியர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. மாநகராட்சிப் பணியாளர்களுக்கு மட்டுமே தற்போது இந்தப் பரிசோதனைகளை செய்கிறோம். ஐ.டி. நிறுவனங்கள் போன்ற அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கும் இந்தப் பரிசோதனை பயனளிக்கும். இது தொடர்பாக அரசு மேற்கொண்டு முடிவுகள் எடுக்கும் பட்சத்தில் திட்டம் விரிவுபடுத்தப்படும்” என்றார்.

இந்தப் பரிசோதனை IGG, IGM Antibody Test அல்லது serosurveillance test என்று அழைக்கப்படும். மாநகராட்சிப் பணியாளர்களுக்குப் பரிசோதனை செய்வதற்காக இரண்டு நிறுவனங்களிடமிருந்து கருவிகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஏஜிஸ் ஹோம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் வி.மோகன்ராம், “கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு உடலில் IGG, IGM ஆகிய இரண்டு வகையான நோய் எதிர்ப்புப் பொருள்கள் (Antibody) உருவாகும். அவற்றைக் கண்டறிவதன் மூலம் ஒருவருக்குத் தற்போது தொற்று உள்ளதா, தொற்று குணமாகிவிட்டதா, தொற்று ஏற்பட்டு குணமாகும் நிலையில் இருக்கிறாரா என்ற மூன்று வகையான முடிவைப் பெற முடியும். இந்தப் பரிசோதனைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அனுமதியளித்துள்ளது” என்றார்.

Source: https://www.vikatan.com/government-and-politics/healthy/rapid-antibody-test-for-chennai-corporation-employees