சென்னையில், 80 சதவீத கொரோனா நோயாளிகள் குணம் – மாநகராட்சி தகவல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில், 80 சதவீத கொரோனா நோயாளிகள் குணமடைந்துவிட்டதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 80 சதவீதம் பேர் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 88 சதவீதம் பேரும், ராயபுரம் மண்டலத்தில் 87 சதவீதம், மணலியில் 85 சதவீதம், பெருங்குடியில் 83 சதவீதம் பேரும் நலம் அடைந்துள்ளனர். மாதவரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் தலா 82 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

இறப்பு விகிதத்தை பொருத்தவரை 1.63 சதவீதமாக உள்ளது. தற்போது 18 சதவீதம் பேர் மருத்துவமனைகளிலும், கொரோனா மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/07/18052711/In-Chennai-80-percent-of-corona-patients-are-cured.vpf