சென்னை: ராயபுரத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் 1,146 ஆகக் குறைந்தது – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் கரோனா பரவத் தொடங்கியது முதல் உச்சபட்ச பாதிப்புகளைக் கொண்டிருந்த ராயபுரத்தில் சனிக்கிழமை காலை நிலவரப்படி கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,146 ஆக குறைந்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கோடம்பாக்கத்தில் மட்டும்தான் இரண்டாயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு 2,099 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதைத் தவிர, திரு.வி.க. நகர், அண்ணாநகர் உள்ளிட்ட 3 மண்டலங்களிலும் கரோனா பாதிப்பு ஆயிரத்தில் உள்ளது.

சென்னையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா் எண்ணிக்கை 67 ஆயிரமாக உயா்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை 1,243 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 83,377- ஆக உள்ளது.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், 6-ஆம் தேதி 20,993-ஆகவும், 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகவும் அதிகரித்தது.

கடந்த 20 நாள்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை அண்மையில் 80 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை 1,243 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 83,377-ஆக அதிகரித்துள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 67,077 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 14,923 போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 1,054- ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை மண்டலம் வாரியாக

மண்டலம் எண்ணிக்கை

திருவொற்றியூா் 527

மணலி 205

மாதவரம் 389

தண்டையாா்பேட்டை 816

ராயபுரம் 1,146

திரு.வி.க. நகா் 1,042

அம்பத்தூா் 893

அண்ணா நகா் 1,609

தேனாம்பேட்டை 1,441

கோடம்பாக்கம் 2,099

வளசரவாக்கம் 720

ஆலந்தூா் 449

அடையாறு 1,002

பெருங்குடி 354

சோழிங்கநல்லூா் 344
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2020/jul/18/chennai-the-number-of-people-receiving-treatment-for-corona-in-rayapuram-has-come-down-to-1146-3438235.html