சென்னை: மயக்க மருந்து ஸ்பிரே; டிக் டாக் பேண்ட்! – சிறுமி விவகாரத்தில் சிக்கிய ஆட்டோ டிரைவர் – Vikatan

சென்னைச் செய்திகள்

துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா, உதவி கமிஷனர் அரிக்குமார் ஆகியோர் ஹரிபாபுவிடம் விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். விசாரணையில் ஹரிபாபு குறித்து முக்கிய தகவல் கிடைத்தது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், “ஹரிபாபுவின் சொந்த ஊர் வந்தவாசி. டிப்ளோமா எலக்ட்ரிக் இன்ஜினீயரிங் படித்துக்கொண்டிருந்த ஹரிபாபு, அங்கு நடந்த சில கசப்பான சம்பவத்துக்குப் பிறகு படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். ஹரிபாபுவின் சகோதரி வீடு சென்னையில் உள்ளது. அங்கு வந்து தங்கியவர், வேலை எதுவும் செய்யாமல் ஊரைச் சுற்றி வந்துள்ளார்.

துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா

அதைப்பார்த்த ஹரிபாவுவின் சகோதரிதான் ஆட்டோ ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். ஆட்டோ ஓட்டி வந்த ஹரிபாபுவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அதனால் பெரம்பூர் ரயில் நிலைய ஸ்டாண்டில் இருந்தபடியே அவ்வழியாகச் செல்லும் பெண்களுக்கு காதல் வலை வீசிவந்துள்ளார். ஆனால், அவரின் காதல் வலையில் யாரும் விழவில்லை. மேலும் ஆட்டோவில் தனியாக இளம்பெண்கள் ஏறினால் ஹரிபாபு, ஆட்டோ ஓட்டும் ஸ்டைலே தனியாக இருந்துள்ளது. இப்படி வாழ்ந்து வந்த ஹரிபாபுவின் கண்ணில் தனியாக வடசென்னை சிறுமி சிக்கியுள்ளார்.

அவரைப் பார்த்ததும் சிறுமியிடம் தவறாக நடக்க திட்டமிட்ட ஹரிபாபு, வலுக்கட்டாயமாக சிறுமியை ஆட்டோவில் ஏற்ற முயன்றுள்ளார். அதற்காக மயக்க மருந்து ஸ்பிரேயையும் பயன்படுத்தியுள்ளார். ஆனால், ஹரிபாபுவிடமிருந்து சிறுமி தப்பிவிட்டாள்” என்றார்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-auto-driver-arrested-in-molestation-charge