திருத்தணிகாசலத்தின் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட முடியாது – ஹைகோர்ட் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: அரசின் கொள்கை முடிவுகளை எடுக்க கூடிய பொறுப்பில் இருக்கக்கூடிய முதலமைச்சரை பற்றி அவதூறாக சமூக ஊடகங்களில் விமர்சிப்பது சரியா என குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரும் மனுவில் தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சித்த மருத்துவத்தில் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறுவதை வரவேற்பதாகவும், சித்த மருத்துவத்தில் அனுபவ அறிவை வைத்துக் கொண்டு உரிய அங்கீகாரமோ தகுதியோ பெறாத நிலையில் திருத்தணிகாசலத்தை மருத்துவராக எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினர். மேலும் அரசின் கொள்கை முடிவுகளை எடுக்க கூடிய பொறுப்பில் இருக்கும் முதலமைச்சரை பற்றி சமூக ஊடகங்களில் அவதூறாக விமர்சிப்பது ஏற்புடையதா எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரும் மனுவில் தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

கொரோனா தொற்றை தடுக்க மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அவை தமிழக அரசால் புறக்கணிக்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் முதலமைச்சருக்கு எதிராக திருத்தணிகாச்சலம் வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்த நிலையில், குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் என். கிருபாகரன், வி.எம்.வேலுமணி அடங்கிய அமர்வு கடந்த முறை விசாரித்த போது, திருத்தணிகாசலம் சித்த மருத்துவர் அல்ல என்றும், அவர் விசாரணைக்கு அளித்துள்ள சான்றுகள் போலியானவை என காவல்துறை தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதை பதிவு செய்த நீதிபதிகள், சித்த மருத்துவத்தின் மீது அரசு வெறுப்பு காட்டுவது ஏன் என கேள்வி எழுப்பியதுடன், சித்த மருத்துவ சிகிச்சை தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து தமிழக அரசும், மத்திய ஆயுஷ் அமைச்சகமும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

imageரஜினி இ-பாஸ் விவகாரம் – ஒன்றரை லட்சம் ஆவணங்களை ஆய்வு செய்யும் சென்னை மாநகராட்சி

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவை நீதிமன்றத்திற்கு கிடைக்கப்பெறாததால், வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

அப்போது திருத்தணிகாசலம் தரப்பில், சித்த மருத்துவ முறையாக படிக்கவில்லை என்றாலும், பரம்பரை வைத்திய முறை மற்றும் பணியாற்றிய அனுபவம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கொரோனாவுக்கு எதிராக சித்த மருந்தை தான் கண்டிபிடித்திருப்பதாகவும், அதன் மூலப்பொருட்கள் குறித்தும் மத்திய அரசின் ஆயுஷ் துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பிய கடிதம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. அதனால் தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சித்த மருத்துவத்தில் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறுவதை வரவேற்பதாகவும், சித்த மருத்துவத்தில் அனுபவ அறிவை வைத்துக் கொண்டு உரிய அங்கீகாராமோ தகுதியோ பெறாத நிலையில் திருத்தணிகாசலத்தை மருத்துவராக எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினர்.

அரசின் கொள்கை முடிவுகளை எடுக்க கூடிய பொறுப்பில் இருக்கும் முதலமைச்சரை பற்றி சமூக ஊடகங்களில் அவதூறாக விமர்சிப்பது ஏற்புடையதா எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரும் மனுவில் தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதன் பின்னர், திருத்தணிகாசலம் கண்டுபிடித்ததாக கூறும் கொரானா தடுப்பு மருத்து குறித்த விண்ணப்பத்தில் எடுத்த நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/madras-hc-questions-siddha-doctor-thiruthanikachalam-392211.html