சென்னை: `அதிகாலை அலாரம்; தலையில் காயங்கள் இல்லை!’ – மருத்துவர் கண்ணன் மரணத்தில் சந்தேகம் – Vikatan

சென்னைச் செய்திகள்

என் தம்பி விருப்பத்துடன்தான் டாகடர் பணியைத் தேர்ந்தெடுத்தான. வேலைப்பளூ என்றால் நிச்சயம் அந்தத் தகவலை எங்களிடம் கூறியிருப்பான். காதல் தோல்வி என்று இன்னொரு காரணத்தைச் சொல்கிறார்கள். அதற்கு வாய்ப்பே இல்லை. அவனின் விருப்பத்தின்படிதான் நாங்கள் பெண் பார்த்து பேசி முடித்தோம். அந்தப் பெண்ணும் டாக்டர்தான். இருவரும் போனில் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தனர். கொரோனா காரணமாக நிச்சயதார்த்தம் நடத்தவில்லை. கொரோனாவுக்குப் பிறகு சுபநிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தோம்.

முருகேசன், முத்துலட்சுமி

என் தம்பிக்கு எந்தப் பிரச்னையும் இல்லாததால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். மருத்துவக் கல்லூரி தரப்பிலிருந்து எந்தத் தகவலையும் வெளிப்படையாக சொல்லவில்லை. டாக்டர் கண்ணனின் மரணம் அதிர்ச்சியாக இருப்பதாக மட்டும் கூறுகிறார்கள். போலீஸ் தரப்பில் விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். என் தம்பியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை போராடுவோம். தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தால் எதற்கு அதிகாலை 4.30 மணிக்கு என் தம்பி அலாரம் வைக்க வேண்டும். மாடியிலிருந்து விழுந்திருந்தால் ஏன் எலும்பு முறிவு ஏற்பட வில்லை. இதுபோல பல சந்தேங்கள் உள்ளன” என்றார்.

டாக்டர் கண்ணன் மரணத்தில் மறைந்திருக்கும் மர்மமுடிச்சுகள் போலீஸ் விசாரணையில் அவிழுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-doctor-suspected-death-relatives-request-probe-2