சென்னையில் 9 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் 9 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் மாநகராட்சியால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்படுகிறது. இந்த பகுதியில் 14 நாட்கள் புதிய தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்றால் ‘சீல்’ அகற்றப்படுகிறது.

தற்போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், ஆலந்தூர், அடையாறு, சோழிங்கநல்லூர், பெருங்குடி ஆகிய 9 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

6 மண்டலங்களில் மட்டும் 62 பகுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இதில் திரு.வி.க நகர் மண்டலத்தில் 7 பகுதிகள், அம்பத்தூர் மண்டலத்தில் 12 பகுதிகள், அண்ணாநகர் மண்டலத்தில் 22 பகுதிகள், தேனாம்பேட்டை மண்டலத்தில் 3 பகுதிகள், கோடம்பாக்கம் மண்டலத்தில் 17 பகுதிகள், வளசரவாக்கம் மண்டலத்தில் ஒரு பகுதியும் அடங்கும்.

மேற்கண்ட தகவல் மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/07/26063308/There-are-no-restricted-areas-in-9-zones-in-Chennai.vpf