சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்விக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்விக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தில் 2020-21-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை, முதுகலை, முதுகலை வணிக நிர்வாகவியல், முதுகலை டிப்ளமோ படிப்பு, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகியவற்றிற்கான சேர்க்கை தொடங்கி இருக்கிறது.

இதற்கான மாணவர் சேர்க்கை இணைய வழி வாயிலாக நேற்று தொடங்கி நடைபெறுகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் http://online.ideunom.ac.in/ என்ற இணையதளம்(ஆன்லைன்) மூலம் விண்ணப்பித்து சேரலாம். சென்னை பல்கலைக்கழக 115 கற்றல் உதவி மையம் மூலமாகவும் சேரலாம். இதுகுறித்த விவரங்களை www.ideunom.ac.in என்ற இணையதளம் மூலமாக அறியலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/07/28002637/Chennai-University-Distance-Education-can-apply-online.vpf