சென்னை: `நான் சாகப் போகணும்; ஏனென்றால் நான் நல்லவள்!’ – ஏரியில் சடலமாக மிதந்த ஆசிரியை – Vikatan

சென்னைச் செய்திகள்

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆவடி உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி, நேரிடையாக விசாரித்து வருகிறார். புவனேஸ்வரி சடலமாகக் கிடந்த ஏரியில் போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் குழந்தை தபித்தாலை தேடிவருகின்றனர். ஆனால், குழந்தை குறித்த தகவல் கிடைக்கவில்லை. மேலும், புவனேஸ்வரியின் செல்போன் மற்றும் சிக்னல் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. புவனேஸ்வரியின் தம்பி செல்வம் அளித்த புகாரின்பேரிலும் பாலாஜி மற்றும் அவரின் அம்மாவிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். அதோடு புவனேஸ்வரியிடம் சண்டைபோட்ட ஸ்டெல்லாவிடமும் விசாரணை நடந்துள்ளது. வீட்டை விட்டு சென்ற பிறகு புவனேஸ்வரிக்கு வந்த போன் அழைப்புகள் குறித்தும் போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.

புவனேஸ்வரி எழுதிய டைரி

புவனேஸ்வரி, டைரியில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில், `நான் சாகப் போகணும். ஏனென்றால் நான் நல்லவள். என்னுடைய நல்ல குணம் தினமும் சீரழிந்துகொண்டிருக்கிறது. அதனால், நான் காலையில் இறைவனிடம் பிராத்தனை செய்வேன். அதன்பிறகு அனைத்து பிரச்னைகளையும் மறந்துவிடுவேன். மற்றவர்கள் என்னைக் கிண்டல் செய்கின்றனர். எனவே அரசு, மக்களுக்காக ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்’ என எழுதப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் 23 ஜூலை வியாழக்கிழமை எழுதப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலும் விசாரணை நடந்துவருகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-teachers-body-found-in-avadi-lake