சென்னை: `8 மாத குழந்தை; ட்ரோன் மூலம் தேடிய காவல்துறை!’ – சோகத்தில் மூழ்கிய குடும்பம் – Vikatan

சென்னைச் செய்திகள்

இதையடுத்து மகளை கொலை செய்து புவனேஸ்வரியும் ஏரியில் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 25-ம் தேதி முதல் இன்று வரை 7 நாள்களாக புவனேஸ்வரி மற்றும் தபித்தாலை போலீஸாரும் அவரின் உறவினர்களும் தேடிவந்தனர். 27-ம் தேதி புவனேஸ்வரியின் சடலம் கிடைத்த நிலையில் தபித்தாலின் சடலம் 5 நாள்களுக்குப் பிறகு கிடைத்துள்ளது. அதனால் தபித்தாலின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

சடலமாக தபித்தால்

இந்த வழக்கை ஆவடி உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் காளிராஜ், எஸ்.ஐ கார்த்தி ஆகியோர் 7 நாள்களாக இரவு பகல் எனப் பாராமல் விசாரித்து வந்தனர்.

இதுகுறித்து ஆவடி போலீஸார் கூறுகையில், “ஆசிரியை புவனேஸ்வரியின் சடலத்தைக் கைப்பற்றிய பிறகு அவரின் குழந்தை தபித்தாலை தேடி வந்தோம். ட்ரோன் மூலம் தேடியபோது குழந்தையின் சடலம் ஏரியில் மிதந்ததைப் பார்க்க முடிந்தது. குழந்தையை கொலை செய்துவிட்டு புவனேஸ்வரி தற்கொலை செய்திருக்க வேண்டும். அதுதொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது” என்றனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-rescued-child-body-with-the-help-of-drone-camera