கொரோனா சிகிச்சைக்கு ரூ. 16 லட்சம் கட்டணம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை மருத்துவமனை.. பகீர் செய்தி! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா சிகிச்சைக்காக 16 லட்சம் ரூபாய் கட்டணம் கேட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

image 10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் ஆகி வருகிறது. என்னதான் ஒரு பக்கம் கேஸ்கள் அதிகமானாலும், இன்னொரு பக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.15,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நீங்க மாஸ்க் பரோட்ட செஞ்சா.. நாங்க மாஸ்கில் “நான்” செய்வோம்.. விழிப்புணர்வுக்காக போடும் போட்டி!

தனியார் மருத்துவமனை

இக்கட்டணத்திற்கு அதிகமான தொகையை நோயாளிகளிடமிருந்து பெற கூடாது என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா சிகிச்சைக்காக 16 லட்சம் ரூபாய் கட்டணம் வாங்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருபவர் மனோகரன்.

கொரோனா வந்தது

இவருக்கு இந்த மாதம் 14ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து இவர் சென்னை நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். மொத்தம் 15 நாள் சிகிச்சைக்கு இவருக்கு 5 லட்சம் ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவரும் அதை ஏற்றுக்கொண்டு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

எவ்வளவு

இவர் சிகிச்சை அளிக்கும் முன் கட்டணத்தை கொடுக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது . அதேபோல் இவரும் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை கட்டி உள்ளார். அதன்பின் இவருக்கு 15 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு குணமாகிவிட்டது. ஆனால் அதன்பின்தான் சிக்கலே வந்துள்ளது.

மிக மோசம்

இவரை மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்ய அனுமதிக்கவில்லை. மாறாக, உங்களுக்கு இதயத்தில் பிரச்சனை உள்ளது. உடனே வேறு மருத்துவமனைக்கு செல்லுங்கள். அதற்கு முன் மருத்துவ கட்டணம் 11 லட்சத்தை செலுத்துங்கள். மொத்தமாக கொரோனா சிகிச்சைக்கு 16 லட்சம் கட்டணம். 5 லட்சம் போக மீதி 11 லட்சத்தை இப்போது செலுத்துங்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

சண்டை வந்தது

இதை கேட்ட மனோகரன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து மனோகரன் குடும்பத்தினர் மருத்துவமனை முன் போராட்டத்தில் குதித்ததனர். அதோடு அவர்களுடன் மக்களும் சேர்ந்து கொண்டு போராட்டத்தில் குதித்தனர். உடனே அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை சமாதானம் செய்தனர். தற்போது போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-a-chennai-hospital-puts-bill-of-16-lakhs-for-a-patient-393155.html