தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருவது நல்லதல்ல- உயர்நீதிமன்றம் வேதனை – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருவது நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை

உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்து கொலை மிரட்டல் மற்றும் கொள்ளையடித்த வழக்கில் குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் மெல்ல மெல்ல பரவி வருவதாகவும், அது நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் நல்லது கிடையாது எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் சென்னை மாநகர காவல்துறை ஆணையரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் பயன்படுத்துவதாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? தமிழகத்தில் இதுவரை எத்தனை பேருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது? குண்டர்கள், கிரிமினல்கள், அரசியல்வாதிகள் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பது சரியல்ல. துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருவதை அரசு முழுமையாக தடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Tags :

Source: https://www.maalaimalar.com/news/topnews/2020/08/03163004/1747946/Madras-HC-says-not-good-that-gun-culture-is-spreading.vpf