சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் – பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்- ராமதாஸ் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சென்னை கிடங்கில் இருக்கும் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை உடனே பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணமாகும்!

சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் அதேபோன்ற வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

image6 வருடமாக சென்னையில் உறங்கிக் கொண்டிருக்கும் பேரபாயம்.. 740 டன் அம்மோனியம் நைட்ரேட்.. பின்னணி என்ன?

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/ramadoss-urges-to-dispose-ammonium-nitrate-stored-in-chennai-ware-house-393566.html