சென்னை: `கொரோனா அச்சம்; மன உளைச்சல்!’ – வாக்கிங் சென்ற ஜிஎஸ்டி அதிகாரி எடுத்த விபரீத முடிவு – Vikatan

சென்னைச் செய்திகள்

இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மணிகண்ணனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்ணன் மரணம் குறித்து நுங்கம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் இந்திய தண்டனைச் சட்டம் 174 வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மணிகண்ணனின் அறையை போலீஸார் சோதனை நடத்தியபோது கடிதம் ஒன்று சிக்கியது. அதில் `எனக்கு வாழ பிடிக்கவில்லை. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என்று எழுதப்பட்டிருந்தது.

தற்கொலை
Representational Image

மணிகண்ணன் மனைவி கலா நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், `எனக்கும் என் கணவருக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில் நான் மருத்துவமனையிவல் சிகிச்சை பெற்றேன். பின்னர், அங்கிருந்து திரும்பி வந்தபிறகு மணிகண்ணன் சிறிது மன உளைச்சலில் காணப்பட்டார். தனக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உண்டாகுமோ என்ற பயத்தில் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என நான் கருதுகிறேன். அவரின் இறப்பில் யார்மீதும் எந்த சந்தேகமும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உயர் பதவியிலிருந்த மணிகண்ணன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-gst-senior-intelligence-officer-commits-suicide