சென்னை: `படிப்பு பிசிஏ; பகுதி நேர வேலை’ – கஞ்சா வழக்கில் சிக்கிய உணவு டெலிவரி உமன் – Vikatan

சென்னைச் செய்திகள்

போலீஸாரிடம் சிக்காமலிருக்க கஞ்சா விற்கும் புதுப் புது டெக்னிக்கை பின்பற்றி வருகின்றனர். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என்பதால் ஆங்காங்கே போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதனால் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க உணவு டெலிவரி செய்யும் பேக்கில் வைத்து கஞ்சா விற்பனை சென்னை சுற்றுவட்டாரப் பகுதியில் சர்வசாதாரணமாக நடந்துவருகிறது. சென்னை கண்ணகி நகர் பகுதியில் உணவு டெலிவரி செய்வது போல கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை கண்ணகிநகர் போலீஸார் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஆரம்பத்தில் கைது செய்தனர்.

வனிதா மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

அதே ஸ்டைலில் சென்னையில் கஞ்சா விற்றதாக கிண்டி போலீஸார் இளம்பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், பைக் ஆகியவற்றை கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு பறிமுதல் செய்துள்ளார்.

இதுகுறித்து கிண்டி போலீஸார் கூறுகையில், “கிண்டி சுற்றுவட்டார பகுதியில் இளம்பெண் ஒருவர் ஆன்லைன் உணவு டெலிவரி செய்வது போல கஞ்சா விற்பதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பெண் குறித்த விவரங்களை சேகரித்தோம். விசாரணையில் அவரின் பெயர் வனிதா (32), மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-young-lady