உச்சத்தை கடந்தது.. 2வது நாளாக 1000க்கு குறைவான கொரோனா கேஸ்கள்.. வேகமாக மீள்கிறது சென்னை! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000க்கும் குறைவாக வந்துள்ளது. இதனால் சென்னை வேகமாக கொரோனாவில் இருந்து மீண்டும் வருகிறது.

image 10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்

தமிழகத்தில் இன்று மட்டும் 5883 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 290907 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மொத்தமாக உள்ள ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 53481 ஆக உள்ளது. மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது.

imageவிடாமல் அதிகரிக்கிறது.. தமிழகத்தில் இன்று மட்டும் 5883 கொரோனா கேஸ்கள்.. 3 லட்சத்தை நெருங்குகிறது!

என்ன சந்தோசம்

இதில் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் சென்னையில் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையே 1000க்கும் குறைவாக வந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 108124 ஆக உள்ளது. சென்னையில் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக 11734 பேர் மடடுமே இருக்கிறார்கள்.

மொத்தமாக குணமடைந்தனர்

சென்னையில் இதுவரை 94100 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 869 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று 984 கேஸ்கள் வந்தது. இந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 100க்கும் குறைவான கேஸ்கள் சென்னையில் வைத்துள்ளது.

குறைகிறது

சென்னையில் அதே அளவு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டும் கூட, கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. இதன் அர்த்தம் சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதாகும். அதோடு சென்னையில் முன்பு ஒரு நாளுக்கு 2000க்கும் அதிகமான கேஸ்கள் கூட வந்தது. அதன்பின் 1500க்கும் குறைவாக சென்றது. இப்போது 1000க்கும் குறைவாக சென்றுள்ளது .

உச்சம் இனி இல்லை

இதனால் சென்னை தனது உச்சத்தை கடந்துவிட்டது. இனி கேஸ்கள் வேகமாக குறையும். இனி கொரோனா குறித்து கவலை அடைய வேண்டியது இல்லை. இன்னும் கொஞ்சம் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் போதும், மொத்தமாக கேஸ்களை கட்டுப்படுத்துவிடலாம், என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். தலைநகர் வேகமாக கொரோனாவில் இருந்து விடபட தொடங்கி உள்ளது என்கிறார்கள்.

ஆனால் வேண்டாம்

ஆனால் சென்னையில் இப்போது அவசரப்பட்டு எதையும் திறக்க வேண்டாம். மக்கள் இப்போதும் கவனமாக இருக்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும். தினசரி கேஸ்கள் 400க்கும் குறைவாக செல்ல வேண்டும். அப்போதுதான் பரவல் மொத்தமாக குறைந்துள்ளது என்று அர்த்தம். அதுவரை மக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-good-news-chennai-almost-crossed-its-peak-cases-are-dropping-fast-393864.html