சென்னை மக்களே உஷார்; அடுத்த 48 மணி நேரம் மிக மிக எச்சரிக்கை – வானிலை மையம்! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் கடந்த ஒருவாரமாக லேசான மழை பெய்து வந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரியாகவும் இருக்கும்.

கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் சென்னையில் 4 சதவீத அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மாநிலம் முழுவதும் 49 சதவீத அதிக பருவமழை பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை சென்னையின் மீனம்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது.

சென்னை விமான நிலையத்திலும் ஆபத்து இருக்கு! அதிர்ச்சித் தகவல்!

அமிந்தகரை, அண்ணா நகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை சிறிது நேரம் பெய்துள்ளது. ராயப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்திருக்கிறது. வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இன்றைய தினம் வங்கக்கடலின் மேற்கு மத்தியப் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் மேற்கு கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

வலுவான தென்மேற்கு காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரத்துக்கும் கீழே வந்த சென்னை பாதிப்பு..! விரைவில் மீளுவோம் என்று நம்பிக்கை…

ஸ்கைமெட் வெதர் பதிவின் படி, கேரளாவில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர கர்நாடகா, தெற்கு கொங்கன், கோவா, சிக்கிம், அசாம், மேகாலயா, மேற்குவங்கம் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-will-receive-heavy-rain-in-next-48-hours-says-imd/articleshow/77443300.cms