மும்பை, பெங்களூருக்கு முன்னோடி.. கொரோனா தடுப்பு.. மெட்ரோக்களுக்கு கிளாஸ் எடுக்கும் சென்னை மாடல்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனாவிற்கு எதிராக சென்னை நிகழ்த்திய சாதனையை பார்த்துவிட்டு, தற்போது மற்ற மாநிலத்தில் இருக்கும் பெரு நகரங்களும் சென்னையின் மாடலை பின்பற்ற தொடங்கி உள்ளது.

image 10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்

தமிழகத்தில் தற்போது தினசரி சராசாரியாக 5000+ கொரோனா கேஸ்கள் வருகிறது. நேற்று 5974 கொரோனா கேஸ்கள் தமிழகத்தில் வந்தது. தமிழகத்தில் மொத்த கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை 296901 ஆக உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து நான்கு நாட்களாக ஆயிரத்திற்கும் குறைவான கேஸ்கள் வருகிறது. நேற்று சென்னையில் 989 கேஸ்கள் வந்தது. மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 109117 ஆக உயர்ந்துள்ளது.

குறைந்தது

சென்னையில் நேற்று 1161 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தமாக சென்னையில் 95861 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தற்போது சிகிச்சை பெரும் நோயாளிகளின் எண்ணிக்கை 11161 ஆக குறைந்துள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவின் வுஹன் போல வேகமாக வளர்ந்து வந்த சென்னை தற்போது வேகமாக கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. ஒரே மாதத்தில் சென்னையில் அசாத்திய மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கிறது.

என்ன மாற்றம்

சென்னையில் இரண்டு மாதங்கள் முன்பு வரை கொரோனா பாதிப்பு சதவிகிதம் 15% ஆக இருந்தது. அதாவது 100 பேரை சோதனை செய்தால் 15 பேருக்கு கொரோனா வந்தது. தற்போது இதை 8.5% ஆக சென்னை குறைத்துள்ளது. மற்ற பெருநகரங்கள் இதை செய்ய முடியாமல் திணறி வருகிறது. இந்த மாத இறுதியில், இந்த எண்ணிக்கை 5% ஆக சென்னையில் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னையில் 1211 ஆக இருந்த கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கையும் மொத்தமாக குறைந்துள்ளது. மொத்தம் தற்போது 24 கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டுமே சென்னையில் தற்போது இருக்கிறது.அதேபோல் இறப்பு சதவிகிதமும் 2.1%த்தில் இருந்து 1.5% ஆக மாறியுள்ளது. மேலும் மொத்தமாக கொரோனா மொத்த எண்ணிக்கை இரட்டிப்பாவது 64 நாட்களில் இருந்து 72 நாட்களாக அதிகரித்து உள்ளது.

பெட்கள் எப்படி

சென்னையில் 17500 கொரோனா பெட்கள் உள்ள நிலையில் 3300 பெட்கள் மட்டுமே தற்போது வரை நிரம்பி உள்ளது. மற்ற எல்லா பெட்டும் காலியாக உள்ளது. இதன் மூலம் சென்னை கொரோனாவை ஏறத்தாழ வென்றுவிட்டது என்று கூறலாம். இந்த நிலையில் சென்னையை போல மும்பை , ஹைதராபாத், கொல்கத்தா , பெங்களூர், புனே ஆகிய நகரங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.

மிகப்பெரியது

சென்னையை போலவே இந்த நகரங்களும் மிகப்பெரிய நகரங்கள் ஆகும். ஆனால் சென்னை கொரோனாவை கட்டுப்படுத்தியது போல இந்த நகரங்களால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. சென்னை இத்தனை லட்சம் மக்கள் தொகையை வைத்துக் கொண்டு, எப்படி கொரோனாவை கட்டுப்படுத்தியது என்று பலரும் கேள்வி எழுப்பி தொடங்கி உள்ளனர். பல கிளஸ்டர் உருவான பின்பும் சென்னை எப்படி கொரோனாவை கட்டுப்படுத்தியது என்று மற்ற பெருநகரங்கள் வியக்க தொடங்கி உள்ளது.

சென்னை சிம்பிள்

சென்னை மிக மிக சிம்பிளாக சரியான திட்டங்கள் கொரோனாவை வீழ்த்தி உள்ளது என்றுதான் கூற வேண்டும்.

1. இரண்டு வாரத்திற்கு போடப்பப்பட்ட கடுமையான லாக்டவுன்.மக்களை தனிமைப்படுத்தியது .

2. இனியும் காண்டாக்ட் டிரேஸ் பலன் அளிக்காது என்பதால் வீடு வீடாக சோதனை.

3. லேசான அறிகுறி உள்ளவர்களை வீட்டில் அல்லது மருத்துவமனையில் உடனே சிகிச்சை மேற்கொள்ள வைத்தது.

பின்பற்ற முடிவு

சென்னை தற்போது கொரோனாவின் உச்சத்தை கடந்துவிட்டது. ஆனால் மும்பை, புனே, பெங்களூர் ஆகியவை கொரோனாவை கடக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் சென்னையையே போலவே கட்டுப்பாட்டு விதிகளை செய்ய, வீடு வீடாக சோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி நிர்வாகிகளுடன் விரைவில் மற்ற பெருநகர நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொள்ளவும், அறிவுரை பெற்றுக்கொள்ளவும் இருக்கிறார்கள் என்று தகவல்கள் வருகிறது.

என்ன கேஸ்கள்

மற்ற பெருநகரங்களில் இருக்கும் கேஸ்கள் விவரம்

  • மும்பை – 123382 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • புனே – 113004 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • ஹைதராபாத் – 80000 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • பெங்களூர் – 74185 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/now-hyderabad-mumbai-pune-to-follow-chennai-model-on-containing-coronavirus-393979.html