சென்னை உள்பட 11 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக, சென்னை உள்பட 11 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, 

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை உள்பட 11 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத் தில், பந்தலூரில் மட்டும் ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/08/14003232/Chance-of-rain-in-11-districts-today-including-Chennai.vpf