அபார நினைவுத் திறனுடன் சிலிர்க்க வைக்கும் சென்னை சிறுவன்.. சாதனை புத்தகங்களில் இடம்பிடித்து அசத்தல் – DriveSpark Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையிலுள்ள டவுட்டன் ஓக்லே நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் 7 வயதாகும் கெவின் ராகுல். தனது அபார நினைவுத் திறனால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

சிலிர்க்க வைக்கும் சென்னை சிறுவன்... சாதனை புத்தகங்களில் அடுத்தடுத்து இடம்பிடித்து அசத்தல்!

படிப்பில் படு சுட்டியாக இருப்பதுடன் பொது அறிவிலும் சிறந்தவராக இருக்கிறார். குறிப்பாக, கார்கள் மீது ஆர்வம் கொண்டிருக்கும் இவர் அண்மையில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.

சிலிர்க்க வைக்கும் சென்னை சிறுவன்... சாதனை புத்தகங்களில் அடுத்தடுத்து இடம்பிடித்து அசத்தல்!

கடந்த ஜூன் மாதம் 27ந் தேதி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் புதிய சாதனையை நிகழ்த்தி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் ஏசியா புக் ஆஃப் ரெக்கார்டு ஆகிய சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார்.

சிலிர்க்க வைக்கும் சென்னை சிறுவன்... சாதனை புத்தகங்களில் அடுத்தடுத்து இடம்பிடித்து அசத்தல்!

அதாவது, ஒரு நிமிடத்திற்குள் 150 கார் பிராண்டு சின்னங்களை அடையாளம் கண்டு கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். எந்தவொரு தடங்களும் இல்லாமல், அவர் சடசடவென 150 கார் லோகோக்களை அடையாளம் கண்டு கூறியது பார்ப்போரை ஆச்சர்யப்படுத்தியது.

சிலிர்க்க வைக்கும் சென்னை சிறுவன்... சாதனை புத்தகங்களில் அடுத்தடுத்து இடம்பிடித்து அசத்தல்!

முன்னணி கார் பிராண்டுகளின் லோகோக்களை பலர் எளிதாக அடையாளம் கண்டு கூறிவிடலாம். ஆனால், வழக்கில் அதிக புழக்கம் இல்லாத பல கார் பிராண்டுகளின் லோகோக்களை பார்த்தவுடன் தடங்கல் இல்லாமல் சொல்லி அசத்துகிறார்.

சிலிர்க்க வைக்கும் சென்னை சிறுவன்... சாதனை புத்தகங்களில் அடுத்தடுத்து இடம்பிடித்து அசத்தல்!

ஒரு நிமிடத்தில் 150 கார் லோகோக்களை கண்டறிந்து கூறி இருப்பது புதிய உலக சாதனையாகவும் பார்க்கப்படுகிறது. கெவின் ராகுலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கெவின் ராகுலின் பெற்றோர் ராஜூ – ஷகீலா தம்பதியரும் தங்களது மகனின் சாதனை குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

கெவின் ராகுலின் சாதனைக்கு எமது பாராட்டுகளையும், தேசத்திற்காகவும், தமிழகத்தின் பெருமைக்கு உரிதாக்கும் வகையில் மேலும் பல சாதனைகளை அவர் தொடர்ந்து படைக்கவும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Source: https://tamil.drivespark.com/off-beat/7-year-old-kevin-raahul-identifies-150-car-logos-in-one-minute-world-record-023543.html