அதிர்ச்சி தரும் சென்னை.. மீண்டும் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. உள்மாவட்டங்களிலும் வேகம் எடுக்கிறது! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழகத்தில் மீண்டும் சென்னையிலும் உள்மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் இன்று 5860 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 332105 பேர் ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து கொரோனா கேஸ்கள் குறையாமல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது சராசரியாக 70 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா சோதனைகள் செய்யப்படுகிறது. இதுவும் அதிகரிக்கும் கேஸ்களுக்கு காரணம் என்கிறார்கள்.

imageதொடர்ந்து அதிகரிக்கிறது.. தமிழகத்தில் ஒரே நாளில் 5860 கொரோனா கேஸ்கள்.. மொத்தமாக 332105 பேர் பாதிப்பு

சென்னை எப்படி

சென்னையில் இன்று 1179 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 115444 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கேஸ்கள் கடந்த ஒரு வாரமாக ஆயிரத்திற்கும் குறைவான கேஸ்கள் வந்தது. ஆனால் மீண்டும் தற்போது கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இரண்டு நாட்களாக மீண்டும் ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் வர தொடங்கி உள்ளது.

சென்னைக்கு அடுத்து

சென்னைக்கு அடுத்து நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று செங்கல்பட்டில் 376 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 20465 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று திருவள்ளூரில் 422 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 19382 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை எப்படி

இன்று கடலூரில் 339 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 6505 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தேனியில் 213 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 9703 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சேலத்தில் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 5737 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்கள் நிலை

நெல்லையில் 169 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 7398 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் 167 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 11107 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 189 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 7359 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-1179-cases-in-chennai-today-inner-districts-in-tn-see-a-rise-in-positive-cases-394615.html