சென்னை: `ஃபேஸ்புக்கில் நட்பு; ஏமாந்த வடமாநிலப் பெண்கள்!’ – யார் இந்த திலீப்? – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை, கீழ்ப்பாக்கம் பர்னபி சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் கடலோயா (49). இவர் மாதவரத்தில் கெமிக்கல், பிளாஸ்டிக் பிசினஸ் செய்துவருகிறார். இவர், கடந்த 30.7.2020-ல் வேப்பேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, “எங்கள் குடும்பத்தினர், சென்னை வேப்பேரியில் வசித்துவரும் சங்கீதா மற்றும் அவருடைய மகன் திலீப் ஆகியோரிடம் நண்பர்களாகப் பழகிவந்தோம். திலீப் என்னிடம், `ஏதாவது தொழில் செய்யலாம். அதில் வரும் லாபத்தைப் பிரித்துக்கொள்ளலாம்’ என அடிக்கடி கூறுவார். கடந்த 19.1.2020-ம் தேதி என்னை திலீப் தொடர்புகொண்டு ஐ போன் மற்றும் விலையுயர்ந்த செல்போன்கள் ஒரு லாட் வந்திருப்பதாகவும், அதை 5,00,000 ரூபாய் கொடுத்து வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் கூறினார்.

பின்னர், எனது பங்குக்கு 2,50,000 ரூபாய் கொண்டு வரும்படி திலீப் கூறினார். நான் அவரது வார்த்தையை நம்பி 20.1.2020-ம் தேதி மதியம் 2 மணியளவில் சூளை, ஐயப்பா கிரவுண்ட் சென்று திலீப்பிடம் 2.50,000 ரூபாய் கொடுத்தேன். மேலும், செலவுக்குப் பணம் தேவைப்படும் என்று கேட்டதால், மேலும் 25,000 ரூபாய் சேர்த்து 2,75,000 ரூபாய் கொடுத்தேன். அதன் பிறகு என்னிடம் சரியாக திலீப் போனில் பேசுவது கிடையாது. அவரது வீட்டுக்குச் சென்று கேட்டபோது, `அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை’ என்று அவரது அம்மா சங்கீதா தெரிவித்தார். நான் விசாரித்தபோது திலீப், நிறைய பேர்களை ஏமாற்றிப் பணம் வாங்கியிருக்கிறார் என்பதும், சிறைக்குச் சென்று வந்தவர் என்பதும் தெரியவந்தது. எனவே, என்னிடம் ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்து ரூ.2,75,000 ரூபாயை பெற்றுச் சென்ற திலீப் என்பவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-youth-over-cheating-charges