அபராதம் வசூலிக்க புதிய நடைமுறை: சென்னை போக்குவரத்து காவல்துறை அறிமுகம்! | Chennai Traffic Police department introduce New method to pay fine! – நியூஸ்7 தமிழ்

சென்னைச் செய்திகள்

அபராதம் வசூலிக்கும் போது காவல்துறை- பொது மக்கள் இடையே பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க புதிய நடைமுறையை சென்னை மாநகர காவல் துறை அறிமுகம் செய்துள்ளது. 

சென்னை போன்ற நகரங்களில் விதிமுறை மீறும் இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் போது, வாகன ஓட்டிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தேவையில்லாத தகராறு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இது மட்டுமல்லாமல், அபராதம் வசூலிக்கும் போலீசார் லஞ்சம் பெறுவதாகவும் அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது. மேலும் சிலர் தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி போலீசாரை மிரட்டி வருவதாகவும் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.இந்த சிக்கல்களை களைவதற்கு அபராத கட்டணங்களை  டிஜிட்டல் முறையில் சென்னை மாநகர காவல்துறையினர் வசூலித்து வந்தனர்.  

இந்நிலையில், தற்போது, சென்னை மாநகர காவல் ஆணைளயர் மகேஷ்குமார் அகர்வால், அபராத கட்டணங்களை வசூலிக்க புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளார். இதுகுறித்து கூறிய திருவல்லிக்கேணி போக்குவரத்து உதவி கமிஷனர் புருஷோத்தமன், சென்னையில் விதிகளுக்கு புறம்பாக வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் மீது உரிய அபராதம் விதிக்கப்பட்டு, அதற்கான ரசீது சம்மந்தப்பட்ட வாகனத்தின் மீது ஓட்டப்படும். இதனால், அபராதம் விதிக்கப்படும் போது ஏற்படும் பிரச்னைகள் தடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Source: https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/20/8/2020/chennai-traffic-police-department-introduce-new-method-pay-fine