சென்னை: `தங்கையின் காதல், தொழில் போட்டி; சுதந்திர தினச் சம்பவம்!’ – பழிக்குப் பழியாக ரௌடி கொலை – Vikatan

சென்னைச் செய்திகள்

தங்கைக்காக நடந்த கொலை – ஃப்ளாஷ்பேக்

விஜயதாஸின் சகோதரியின் கணவர், சென்னை வியாசர்பாடி கல்யாண்புரத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (40). இவர், ஒப்பந்தப் பணிகளைச் செய்துவந்தார். 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அசோக் நகர் பில்லர் அருகே நடந்து சென்றபோது ஜெயக்குமார் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்து போலீஸார் விசாரித்தபோது பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. ஜெயக்குமாரின் மனைவி கௌசல்யா. இருவரும் காதலித்து, திருமணம் செய்துகொண்டனர்.

கௌசல்யாவின் காதல் திருமணத்தை அவரின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், ஜெயக்குமாரைக் கொலை செய்ய கௌசல்யாவின் சகோதரர் விஜயதாஸ் திட்டமிட்டார். இதற்கிடையில் கௌசல்யாவுக்கும் ஜெயக்குமாருக்கும் கருத்து வேறுபாடு ஏறபட்டு, இருவரும் பிரிந்தனர். தங்கையின் வாழ்க்கை கேள்விக்குறியானது, ஒப்பந்தப் பணியில் ஜெயக்குமாருக்கும் விஜயதாஸுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஆகிய காரணங்களால் கூலிப்படையை ஏவி, ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த வழக்கில் கைதான விஜயதாஸ் சமீபத்தில் வெளியில் வந்த நிலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அதனால் ஜெயக்குமார் கொலைக்கு பழிக்குப் பழிவாங்க விஜயதாஸ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணை நடந்துவருகிறது.

ஜெயக்குமார் கொலை செய்யப்பட்ட சுதந்திர தினத்தன்றே விஜயதாஸைக் கொலை செய்ய ஒரு டீம் ஸ்கெட்ச் போட்டுள்ளது. ஆனால் சுதந்திர தினத்தில் கொலை செய்ய முடியாததால், நேற்றிரவு விஜயதாஸ் கொலை செய்யப்பட்ட தகவல் வியாசர்பாடி போலீஸாருக்குக் கிடைத்துள்ளது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-rowdy-murdered-near-ashok-pillar