சென்னை: `பெட்ஷீட்டுக்கு ரூ.12 லட்சம், சொகுசு கார்!’ – ஆசையைத் தூண்டி வலைவிரித்த கும்பல் – Vikatan

சென்னைச் செய்திகள்

அந்தச் சமயத்தில் சுரேஷின் செல்போனுக்கு ஆன்லைன் ஷாப்பிங் மேனேஜர் என்று கூறியவர் மீண்டும் கால் செய்திருக்கிறார். அப்போது சப்-இன்ஸ்பெக்டரே போனை எடுத்துப் பேசினார். உடனே மேனேஜர், `ஏன் நீங்கள் இன்னும் போட்டோ, ஆதார் கார்டு போன்ற விவரங்களை அனுப்பவில்லை?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு சப்-இன்ஸ்பெக்டர், `நீங்கள் நேரில் வந்து போட்டோ, ஆதார் கார்டு ஆகியவற்றை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த மேனேஜர், `உங்களுக்குப் பரிசு வேண்டுமென்றால் அனுப்புங்கள்’ என்று பதில் சொல்லியிருக்கிறார். உடனே சப்-இன்ஸ்பெக்டர், `நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள்?’ என்று கேட்டதும், போனிலேயே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அனுப்பப்பட்ட மெசேஜ்

இதையடுத்து ஆன்லைன் நிறுவன மேனேஜர் இணைப்பைத் துண்டித்திருக்கிறார். அதன் பிறகு சுரேஷிடம் போலீஸார், `இது போன்ற மோசடி அழைப்புகளை நம்பி, பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம்’ என்று அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

இது குறித்து சுரேஷிடம் பேசினோம். “350 ரூபாய் பெட்ஷீட்டுக்கு யாராவது 12,80,000 ரூபாய் மதிப்பிலான சொகுசு கார் கொடுப்பார்களா…. அவர்கள் கொடுப்பதாகக் கூறியதும், எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், `அந்த காரை வாங்க 12,800 ரூபாய் செலுத்த வேண்டும்’ என்று கூறியபோது சந்தேகம் உறுதியானது. அதனால்தான் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தேன். `சதுரங்க வேட்டை’ படத்தைப்போல ஆசையைத் தூண்டி, ஆன்லைனில் மோசடி செய்வதை ஒரு கும்பல் வாடிக்கையாக வைத்திருக்கிறது. ஃபேஸ்புக்கில் மேனேஜரின் செல்போன் நம்பரைப் பதிவு செய்ததால், பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் தகவல்களைப் பதிவு செய்துள்ளனர். புத்திச்சாலித்தனமாகச் செயல்பட்டதால் நான் ஏமாறவில்லை” என்றார்.

`ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளன. அதனால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்’ என சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்திவருகின்றனர்.

Source: https://www.vikatan.com/news/crime/online-fraud-gang-tries-to-cheat-chennai-man