சென்னை பெண்ணை கடத்திய வழக்கில் பிரபல மத போதகர் ஜாகீர்நாயக் உள்பட 5 பேர் மீது வழக்கு – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

சென்னை சேர்ந்த பெண்ணை கடத்திய வழக்கில் பிரபல மத போதகர் ஜாகீர்நாயக் உள்பட 5 பேர் மீது தேசியபுலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து உள்ளது.

புதுடெல்லி:

சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரின் மகள், உயர்படிப்பிற்காக இங்கிலாந்தின் தலைநகரான லண்டனிற்கு சென்றுள்ளார். ஆனால், திடீரென்று அந்த பெண் கடந்த மே மாதம் 28-ஆம் தேதி முதல் திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, இது குறித்து உடனடியாக சென்னை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தார்.

இதையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் விசாரிப்பதற்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பிக்க, கடந்த 16-ஆம் தேதி முதல் இது தொடர்பான விசாரணை தொடங்கியது. அப்போது அந்த பெண்ணை கடத்தியது வங்கதேசத்தை சேர்ந்த மதபோதகார் நபீஸ் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து வழக்கின் விசாரணை விரைவுபடுத்தப்பட்டது. முக்கியத்துவம் கருதி வழக்கின் விசாரணை ஜூலை 11-ஆம் தேதி தில்லி என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.

என்ஐஏ அதிகாரிகள் மாணவி கடத்தல் தொடா்பாக புதிய வழக்கைப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் மாணவியின் நண்பராக நடித்து நாடகமாடி கடத்திய வங்கதேசத்தைச் சோ்ந்த நபீஸ், அவருடைய தந்தை சா்தார் செகாவத் உசேன் பாகுல், மத போதகா் ஜாகிர் நாயக், யாசி குஷிதி, நகுமான் அலிகான் ஆகிய 5 போ் மீது சதித்திட்டம் வகுத்தல், குற்றச் செயல் புரிதல், ஆள் கடத்தல், பாலியல் தொல்லை கொடுத்தல், ஏமாற்றுதல், பணம் கேட்டு மிரட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.இது தொடா்பாக என்ஐஏ, லண்டன் காவல்துறை உதவியை நாடியுள்ளது என கூறப்பட்டுள்ளது

Source: https://www.maalaimalar.com/news/national/2020/08/27074058/1822953/Five-people-including-famous-religious-teacher-Zakir.vpf