சென்னை குடிநீர் ஆதாரம் அதிகரிப்பு ரூ.2,600 கோடியில் புதிய திட்டம் – தினமலர்

சென்னைச் செய்திகள்
Advertisement

சென்னை; சென்னை நகரின் குடிநீர் ஆதாரத்தை அதிகரிப்பதற்காக, 2,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய திட்டத்தை, பொதுப்பணித் துறை செயல்படுத்த உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. சென்னைக்கு மாதம், ஒரு டி.எம்.சி., குடிநீர் தேவைப்படுகிறது. வரும் காலங்களில், இது 2 டி.எம்.சி.,யாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை கருத்தில் வைத்து, தேர்வாய் கண்டிகை – கண்ணன்கோட்டை ஏரிகளை இணைத்து, புதிய நீர்த்தேக்கம் கட்டும் பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதேபோல, காட்டூர் -தத்தமஞ்சி ஏரிகளை இணைத்து, புதிய நீர்க்தேக்கம்அமைக்கும் பணிகள் துவங்கிஉள்ளன.இதை தொடர்ந்து, பொதுப்பணித் துறையுடன், சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியம் இணைந்து, புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளன. இத்திட்டத்தின் கீழ், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள, சில ஏரிகள் புனரமைக்கப்பட உள்ளன. அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு, ஆரணியாறு ஆகியவற்றில், பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன. இவற்றில் நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.வறட்சி காலங்களில், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து, சென்னைக்கு குடிநீர் எடுத்து வரப்படுகிறது.குடிநீர் எடுக்க பயன்படுத்தும் கிணறுகளுக்கு, நீர்வரத்தை அதிகரிப்பதற்காக, நீர் செறிவூட்டும் அமைப்புகளும் உருவாக்கப்பட உள்ளன.

இத்திட்டத்திற்காக, உலக வங்கியிடம், 2,600 கோடி ரூபாய் கடனுதவி பெறுவதற்கான முயற்சி துவங்கப்பட்டு உள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகளில், சென்னை மண்டலநீர்வளத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில், திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, உலக வங்கியிடம்,முதற்கட்ட ஒப்புதல் பெறப்பட உள்ளது.

Advertisement

Dinamalar iPaper

தங்கத்துக்கு 'கிஸ்தி' - சங்கத்தில் 'குஸ்தி'


தங்கத்துக்கு ‘கிஸ்தி’ – சங்கத்தில் ‘குஸ்தி’

முந்தய

கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை துவக்கம்


கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை துவக்கம்

அடுத்து








வாசகர் கருத்து



Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2605192