சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நேரம் குறைப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் போக்குவரத்து வருகிற 7-ந்தேதி முதல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் இயக்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

இந்நிலையில் சென்னையில் செப்டம்பர் 7 முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலக நேரமான காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும்; மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கம்.

* மெட்ரோ ரெயில் நிறுத்தம் நேரமானது 20 நொடிகளில் இருந்து 50 நொடிகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

 * மெட்ரோ பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/09/03121808/Reduction-of-Metro-Rail-service-time-in-Chennai.vpf