இதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.. தளர்வுக்கு பின்பும்.. சென்னையில் குறையும் கொரோனா.. என்ன நடக்கிறது? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கொரோனா கேஸ்கள் வேகமாக குறைந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

image 10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்

தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்டது. இதனால் பெரும்பாலான சேவைகள் தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது.

இ பாஸ் மாவட்டங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பிவிட்டது என்று கூறலாம். இன்னொரு பக்கம் 7ம் தேதி கூடுதல் தளர்வுகள் கொண்டு வரப்பட உள்ளது.

imageஇந்தியாவில்தான் முதல் முறையாக ஒரேநாளில் 96,000 பேருக்கு கொரோனா- உலக அளவில் தொடரும் 3-வது இடம்

என்ன எதிர்பார்ப்பு

தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்ட நிலையில் தமிழகத்தில் கொரோனா கேஸ்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே வர தொடங்கி இருக்கிறார்கள். பேருந்துகள் நிரம்பி வழிய தொடங்கி உள்ளது.

சமூக இடைவெளி இல்லை

முக்கியமாக சென்னையில் இருக்கும் ஷோ ரூம்களில், கடைகளில் பெரிய அளவில் கூட்டம் நிரம்பி வழிக்கிறது. தி நகர் சாலைகள் மீண்டும் உயர் பெற்றுள்ளது. மக்கள் எல்லோரும் பணிக்கு திரும்ப தொடங்கி விட்டனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னைக்கு 10 லட்சம் பேர் வரை திரும்பி வந்து இருக்கிறார்கள். இவர்களில் பலர் தனிமைப்படுத்தடாமல் பணிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நிலைமை என்ன

ஆனால் சென்னையில் எதிர்பார்ப்புக்கு மாறாக கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. ஆம் சென்னையில் 1200க்கும் அதிகமாக கேஸ்கள் வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக 900+ கேஸ்கள் மட்டுமே வருகிறது. சென்னையில் நேற்று 965 கொரோனா கேஸ்கள் வந்தது. அதற்கு முதல்நாள் 992 கொரோனா கேஸ்கள் வந்தது. அதற்கு முதல்நாள் 968 கொரோனா கேஸ்கள் வந்தது. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது.

ஏன் இப்படி

சென்னையில் கொரோனா சோதனை குறைந்துவிட்டது, அதனால் கேஸ்கள் குறைவாக வருகிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. தமிழகத்தில் எப்போதும் போல 70 ஆயிரத்திற்கும் அதிகமாக கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுதான் வருகிறது. நேற்று தமிழகத்தில் 81793 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டது. சென்னையில் இதில் 30%க்கும் அதிகமான சோதனை செய்யப்பட்டுள்ளது.

எப்படி குறைகிறது

ஆனாலும் சென்னையில் கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. ஆம் கேஸ்கள் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைய தொடங்கி உள்ளது. ஏன் இப்படி கேஸ்கள் குறைகிறது, அதே அளவு டெஸ்ட் எடுத்தும் எப்படி கொரோனா கேஸ்கள் அதிகரிக்காமல் இருக்கிறது என்று கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் தமிழகத்திலும் சராசரியாக தினசரி கொரோனா கேஸ்கள் 5900ஐ இன்னும் தாண்டவில்லை.

பெரிய குழப்பம்

கடந்த ஒரு மாதமாக தினமும் 5900 என்ற எண்ணிக்கையில் சராசரியாக தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் வந்துள்ளது. இதுவும் மற்ற மாநிலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று கர்நாடாகாவில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் வந்தது. ஆனால் தமிழகத்தில் ஒரு மாதமாக கொரோனா கேஸ்கள் உயராமல் ஒரே அளவில் வருகிறது.

தளர்வுகள் வந்துவிட்டது

மற்ற மாநிலங்களில் கொரோனா அதிகரிக்கிறது.. ஆனால் தமிழகத்தில் தளர்வுகள் வந்த பின்பும், மக்கள் இடம்பெயர்வு நிகழ்ந்த பின்பும் கேஸ்கள் அதிகரிக்கவில்லை. டெஸ்டிங் எண்ணிக்கையும் தமிழகத்தில் குறைக்கப்படவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது. தமிழகத்தில் ஏன் கொரோனா கேஸ்கள் குறைகிறது, முக்கியமாக சென்னையில் எப்படி கேஸ்கள் குறைகிறது என்பது மருத்துவர்களுக்கே புதிராக உள்ளது. இந்த இடம்பெயர்வு காரணமாக வந்த கொரோனா கேஸ்கள் வரும் நாட்களில் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புள்ளது.

வரும் நாட்களில் அதிகரிக்கும்

வரும் நாட்களில் தமிழகத்தில் கேஸ்கள் அதிகரிக்க கூட வாய்ப்புள்ளது. அதிகரிக்காமல் அப்படியே கிராப் கீழே போகவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை தமிழகம் தனது உச்சத்தை கடந்து இருக்கலாம் என்று மருத்துவர்கள் இதற்கு விளக்கம் அளிக்கிறார்கள். தமிழகத்தில் நேற்று 5870 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,57,697 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 965 பேர் சென்னையில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,39,720ல் இருந்து 1,40,685 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 12,003ல் இருந்து 11,412 ஆக உள்ளது.

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-the-drop-in-cases-in-chennai-makes-experts-wonder-396806.html