சென்னை: `அவளுக்குத் திருமண வாழ்க்கையும் சரியா அமையலை!’ -மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பெண்ணின் சகோதரி – Vikatan

சென்னைச் செய்திகள்

அதனால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அலிமா தனியாக வாழ்ந்துவந்தார். அவர் எங்கள் வீட்டில்தான் தங்கியிருந்து பல இடங்களுக்குச் சென்று வீட்டு வேலை செய்துவந்தார். 14.9.2020 காலையில், நாராயணசாமி தெருவிலுள்ள ஹாகிதா பேகம் என்பவரின் வீட்டுக்கு வேலைக்குச் சென்றார். காலை 9:15 மணியளவில் மின்சாரம் தாக்கி அவர் கீழே விழுந்திருக்கிறார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நானும் எனது குடும்பத்தினரும் நாராயணசாமி தெருவுக்கு வந்து பார்த்தபோது, எனது தங்கை அலிமா இறந்துகிடந்தார். இரவு பெய்த கனமழை காரணமாக நாராயணசாமி தெருவில் மழைநீர் தேங்கி இருந்த இடத்தில் மின்கசிவு ஏற்பட்டு, என் தங்கை இறந்தது தெரியவருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு என் தங்கையின் சடலத்தை என்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜென்னத்திடம் பேச அவரின் செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை.

எஃப்.ஐ.ஆர்

அலிமா உயிரிழந்ததையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், `சம்பந்தப்பட்ட மண்டலத்தின் உதவி கோட்ட மின்பொறியாளர் கண்ணன், இளநிலைப் பொறியாளர் வெங்கடராமன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மொத்தம் 2,85,000 தெரு விளக்குகளும் 7,220 மின்பெட்டிகளும் இருக்கின்றன. இவற்றைப் பராமரிப்பதற்காக மாநகராட்சியில் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 700 பேர் நாள்தோறும் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது 200 வார்டுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் எந்த இடத்திலும் மின்கசிவோ அல்லது பழுதோ இல்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source: https://www.vikatan.com/news/death/chennai-woman-died-of-electric-shock