சென்னை: `உன் பெற்றோரிடம் சொல்லட்டுமா?’- மாணவியின் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் – Vikatan

சென்னைச் செய்திகள்

அதன்பிறகே உண்மையைச் சொல்லத் தொடங்கினார். மாணவியின் அம்மாவும் அப்பாவும் வேலைக்குச் சென்றுவிடுவார்கள். அதனால், பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் மாணவி, மாலை நேரத்தில் டியூசனுக்கு சென்று வந்துள்ளார். அப்போது குணசீலன், மாணவியை டியூசனுக்கு அழைத்து சென்றுள்ளார். தனியாக மாணவி வீட்டில் இருக்கும் போது குணசீலன், அவரிடம் அன்பாகப் பழகியுள்ளார். இந்தப் பழக்கம் நாளடைவில் மாணவி மீது குணசீலனுக்கு ஒருதலைக் காதலாக மாறியுள்ளது. மாணவியிடம் ஆசைவார்த்தைகளைக் கூறிய குணசீலன், அவருடன் நெருக்கமாகப் பழகியுள்ளார். அதை தன்னுடைய செல்போனில் ரகசியமாக வீடியோவாகவும் போட்டோஸ்களாகவும் எடுத்து வைத்துள்ளார்.

ஆபாச படம்
representational image

குணசீலனின் நடவடிக்கைகள் வேறுதிசையில் செல்வதையறிந்த மாணவி, அவருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்துள்ளார். உடனே குணசீலன், தன்னிடம் உள்ள மாணவியின் வீடியோக்களை காண்பிடித்து மிரட்டியுள்ளார். அதில் ஒரு கட்டமாகத்தான் மாணவியின் அம்மாவுக்கு உன் பெற்றோரிடம் சொல்லட்டுமா என்ற எஸ்.எம்.எஸை அனுப்பி வைத்துள்ளார். இந்த மிரட்டலுக்குப் பயந்து மாணவி, தன்னுடைய விருப்பத்தின்படி நடந்துகொள்வாள் என்று குணசீலன் எதிர்பார்த்துள்ளார். ஆனால், மாணவி, தற்கொலை செய்து கொண்டதும் பயந்துப் போன குணசீலன், செல்போனில் இருந்த மாணவி தொடர்பான தடயங்களை அழித்துவிட்டு வேறு வீட்டுக்குச் சென்றுவிட்டார். ஆனால், அடையாறு சைபர்க்ரைம் போலீஸார் 3 மாதங்களுக்குப்பிறகு ஆதாரங்களைத் திரட்டி குணசீலனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-man-in-student-suicide-case