அண்ணா நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: சென்னையில் மண்டலவாரியாக விவரம் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் கரோனா பாதிப்பு

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 10,311 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. சென்னையில் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக சற்று அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

சென்னையில் இதுவரை 1,62,125 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,149 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 1,48,665 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 10,311 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், மண்டல வாரியாக கரோனா பாதிப்பு குறித்த விவரத்தில், கோடம்பாக்கத்தில் 1,137 பேரும், அண்ணா நகரில் 1,153 பேரும், அம்பத்தூரில் 794 பேரும், அடையாறில் 878 பேரும், வளசரவாக்கத்தில் 799 பேரும், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Source: https://www.dinamani.com/tamilnadu/2020/sep/27/corona-update-zonal-wise-details-in-chennai-3473611.html