சென்னை: `இந்த அளவுக்கு சம்பாதிக்க முடியாது!’ – போலி கால்சென்டர் மன்னன் சிக்கிய பின்னணி – Vikatan

சென்னைச் செய்திகள்

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “போலி கால் சென்டர்களின் மாஸ்டர் மைண்ட் கோபிகிருஷ்ணன். சிறையிலிருந்து வெளியில் வந்த கோபிகிருஷ்ணனுக்கு பணத்தேவை ஏற்பட்டிருக்கிறது. வேறு தொழில் செய்தால் இந்த அளவுக்குச் சம்பாதிக்க முடியாது என்பதால், மீண்டும் போலி கால் சென்டரைத் தொடங்கியிருக்கிறா. சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கோபிகிருஷ்ணனின் கூட்டாளிகள் போலி கால் சென்டர்கள் நடத்திவந்தனர். அவர்களையும் கைதுசெய்திருக்கிறோம்.

போலி கால் சென்டர் நடந்த பென்ஸ் கிளப்

எனவே, பொதுமக்கள் லோன் தேவை என்றால் வங்கிகளுக்கு நேரில் செல்லுங்கள். கால் சென்டரிலிருந்தோ, குறிப்பிட்ட நிதி நிறுவனங்களின் பெயரைச் சொல்லி போன் மூலமாகவோ குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறுபவர்களை நம்பி, பணத்தை ஏமாற வேண்டாம். மேலும், ஓ.டி.பி எண்கள், வங்கி ஆவணங்கள், அடையாள அட்டைகளை அறிமுகம் இல்லாதவர்களுக்கு வாட்ஸ்அப்பிலோ, இ-மெயிலோ அனுப்ப வேண்டாம்” என்றார்.

“கொரோனா காலகட்டத்தில் எனக்குப் பணம் தேவைப்பட்டது. அதனால்தான் போலி கால் சென்டரைத் தொடங்கினேன்” என்று கூறியிருக்கிறார் கோபிகிருஷ்ணண்.

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் போல…!

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-fake-call-center-master-mind