சென்னையில் அக்டோபர் 5 முதல் மீண்டும் புறநகர் ரயில் சேவை! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

கொரோனா பொதுமுடக்க தளர்வுகளில் முக்கிய அம்சமாக, செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மொத்தம் 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மெட்ரோ ரயில் சேவையும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

ஆனால், சென்னை புறநகர் ரயில் சேவைக்கு மட்டும் இதுநாள்வரை அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. அக்டோபர் 7 ஆம் தேதி முதல் புறநகர் ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

அக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்குகிறது சென்னை புறநகர் ரயில்கள் சேவை!

ஆனால், சில தினங்களுக்கு முன் தமிழக அரசு வெளியிட்ட ஐந்தாம் கட்ட பொதுமுடக்க தளர்வுகளில் புறநகர் ரயில் சேவைக்கான தடை அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்திருந்த ரயில் பயணிகளுக்கு சற்று ஆறுதலான செய்தியை தெற்கு ரயில்வே இன்று (அக்.2) அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து மேலும் மூன்று சிறப்பு ரயில்கள்…முன்பதிவு நாளை தொடக்கம்!

அதாவது, அக்டோபர் 5 ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதாகவும், ஆனால், இதனை அன்றாடம் அத்தியாவசியப் பணிகளுக்கு அலுவலகம் சென்று வருவோர் மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பையடுத்து மருத்துவம், மின்சாரம், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளில் இருப்போர் மட்டும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம்.

கொரோனா பயம் வேண்டாம்: சென்னை மெட்ரோவில் புதிய வசதி!

புறநகர் ரயில் சேவையை பெற விரும்புவோர், தாங்கள் அத்தியாவசியப் பணியில் இருக்கிறோம் என்பதற்கான தமிழக அரசின் அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும் என்றும் தெற்கு ரயி்ல்வே அறிவித்துள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-suburban-train-service-resume-from-october-5th-with-condition/articleshow/78444897.cms