சென்னை: `ரூ.2,000-தான் டார்க்கெட்; `Sale’ வாட்ஸ்அப் குரூப்!’ – அதிரவைத்த ஆன்லைன் மோசடி – Vikatan

சென்னைச் செய்திகள்

விலை குறைவு என்பதால் ராஜேந்திரனுக்கு ஆர்டர்கள் குவிந்தன. டிரெஸ்களை செலக்ட் செய்து, அவற்றுக்குரிய பணத்தை ராஜேந்திரனின் வங்கிக் கணக்குக்கு ஏராளமான பெண்கள் அனுப்பிவைத்துவிட்டு, ஆடைகள் வீடு தேடிவரும் என ஆவலுடன் காத்திருந்திருக்கிறார்கள். ஆனால் ராஜேந்திரன், பணம் அனுப்பிய பெண்ணின் செல்போன் நம்பரை வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து முதலில் நீக்குவார். பிறகு அந்த நம்பரை பிளாக் செய்துவிடுவார். அதனால், ராஜேந்திரனை அந்தப் பெண்களால் தொடர்புகொள்ள முடியாது. ஒரு பெண்ணிடம் அதிகபட்சமாக ராஜேந்திரன் 2,000 ரூபாய்க்கு மேல் ஏமாற்ற மாட்டார். அதனால் இரண்டாயிரம் ரூபாய்தானே என்று பெண்களும் போனால் போகிறது என்று விட்டுவிடுவார்கள். அதனால் தொடர்ந்து ராஜேந்திரன், இதுபோல மோசடியில் ஈடுபட்டுவந்திருக்கிறார்.

ஆன்லைன் மோசடி
representational image

இந்தச் சமயத்தில், இந்திரா என்பவர் அளித்த புகாரின் பேரில் விசாரித்தபோதுதான் ராஜேந்திரனின் மோசடி வேலைகள் வெளியில் தெரியவந்திருக்கின்றன. அவரைக் கைதுசெய்து ராஜேந்திரனிடமிருந்து ஒரு செல்போன், ஆறு சிம் கார்டுகள், ஒரு மெமரி கார்டு ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். ராஜேந்திரனிடம் எத்தனை பெண்கள் ஏமாந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. அவரின் செல்போனிலுள்ள வாட்ஸ்அப் குரூப்பில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கிறார்கள்” என்றனர்.

ஒரு ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு, பெண்களின் ஆசையைத் தூண்டி லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றி வந்திருக்கிறார் ராஜேந்திரன். “ஆன் லைனில் பொருள்களை வாங்கும்போது பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்’’ என்கின்றனர் பைசர் க்ரைம் போலீஸார்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-mba-graduate-over-online-fraud-complaint