`தமிழர்களுக்குப் பிச்சை போடுகிறீர்களா?’ – கொதித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்… ஏன்? – Vikatan

சென்னைச் செய்திகள்

தபால்துறை, எஸ்.பி.ஐ வங்கித் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள்கூட பட்டவர்த்தனமாக வெளிப்பட்டன. நீதிபதிகளும் இவற்றையெல்லாம் கவனித்துதான், தற்போது அரசை நோக்கிக் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இது வரவேற்கக்கூடியது.

அரசு வேலைகளில் மண்ணின் மக்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டுவிட்டால், இது போன்ற முறைகேடுகளில் ஈடுபவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். மண்ணின் மைந்தர்களின் வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்படும். அதனால், தமிழக அரசு உடனடியாக, சட்டமியற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்” என்றார்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

`தற்போது இதற்காகக் குரல் கொடுத்துவரும் தி.மு.க., ஏற்கெனவே ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருப்பதுபோல சட்டமியற்றத் தவறிவிட்டது’ எனச் சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து, தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம்.

“குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், இந்தி எதிர்ப்பு, காவிரி உரிமை என ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பிரச்னை முதன்மையானதாக இருக்கும். அந்தவகையில், தற்போதுதான் இந்த விவகாரம் முதன்மையான விவகாரமாக மாறியிருக்கிறது. அதனால், தமிழக மக்களின் நலனுக்காக, மாநில சுயாட்சிக்காகப் போராடும் அனைவரும் இணைந்து போராட வேண்டிய காலகட்டம் இது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக இது சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் அவர்.

நீதிபதிகள் தமிழக அரசை நோக்கி எழுப்பியிருக்கும் கேள்விகள் குறித்து, அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் பேசினோம்.

“மத்திய அரசு வேலைவாய்ப்புகளில், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறோம். அது குறித்து சட்டமியற்றவும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன’’ என்றார் அவர்.

Source: https://www.vikatan.com/government-and-politics/politics/madras-hc-raises-question-over-preference-for-tamils-in-government-jobs