`விவசாயப் பணிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தை ஏன் பயன்படுத்தக்கூடாது?’ – மதுரை உயர்நீதிமன்றக் கிளை – Vikatan

சென்னைச் செய்திகள்

“கிராமங்களில் வேலை வாய்ப்பின்றி இருப்பவர்களுக்கு உதவும் வகையிலும், வேலை வாய்ப்பு அளிக்கும் வகையிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது. ஆனால், இத்திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் சேடப்பட்டி ஒன்றியத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. தகுதியற்றவர்களுக்கு 100 நாள் வேலை செய்வதற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டை விசாரித்து நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்” என்று சீனிவாசகம் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

Source: https://www.vikatan.com/government-and-politics/agriculture/madras-high-court-bench-at-madurai-questions-govt-over-mgnrega-scheme