சும்மா அதிருதுல்ல… ரஜினிக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
நடிகர் ரஜினிகாந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து தான் பதிவு செய்த மனுவைத் திரும்பப் பெற்றுள்ளார் ரஜிகாந்த்.

ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி நிலுவை இருந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல், அக்டோபர் வரையிலான சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் இருந்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி தரப்பில் ராகவேந்திரா மண்டபத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்த மனுவில், மார்ச் 24 ம் தேதி முதல் மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாததால் எந்த வருமானமும் இல்லை எனவே சொத்து வரி கேட்டு நிர்பந்திக்ககூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
ரஜினி சொல்லை கேட்கிறார்களா ரஜினி ரசிகர்கள்

இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ரஜினிகாந்துக்கு எச்சரிக்கை விடுத்தது. அத்துடன், இதற்கு மேலும், இப்படி நடந்தால் அபராதம் விதிக்க நேரிடும் என்றும் நீதிபதி அனிதா அதிரடியாக எச்சரித்தார். இதனையடுத்து மனுவை ரஜினிகாந்த் தரப்பு வாபஸ் பெற்றுள்ளது.

மேலும், நாளை இரவு (15ம் தேதி ) 12 மணிக்குள் ரூ. 6.5 லட்சம் வரியை ரஜினி கட்ட தவறினால் அவருக்கு 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த்

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/madras-high-court-warned-rajinikanth-for-raghavendra-mandapam/articleshow/78654780.cms