சென்னை-ஜோத்பூருக்கு தினசரி ரெயில்கள் இயக்க வேண்டும் – தயாநிதிமாறன் எம்.பி. வலியுறுத்தல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை-ஜோத்பூருக்கு தினசரி ரெயில்கள் இயக்க வேண்டும் என ரெயில்வே மந்திரிக்கு, தயாநிதிமாறன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மத்திய ரெயில்வே மந்திரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

மத்திய சென்னை பகுதிகளில் வசிக்கக்கூடிய ராஜஸ்தான் சமுதாயத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர்கள் வணிக சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் சென்னையில் இருந்து அவர்களுடைய சொந்த மாநிலமான ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மற்றும் ஜெய்ப்பூருக்கு பணி நிமித்தமாகவும், சொந்த வேலை காரணமாகவும் சென்று வர வாரத்துக்கு 3 முறை மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் சார்பில் ஏற்கனவே தங்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்து, வருகின்ற பண்டிகை காலத்துக்கு முன்னதாகவே என் தொகுதிவாழ் மக்களின் நீண்டநாள் குறையை தீர்த்து தினசரி அந்த ரெயில்களை இயக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/10/15092733/Daily-trains-to-ChennaiJodhpur–Dayanidhimaran-MP.vpf