சென்னையில் 2வது நாளாக தங்கம் விலையில் பெரும் சரிவு.. நகை வாங்குவோர் உற்சாகம்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் தங்கம் விலை இரண்டாவது நாளாக சரிந்துள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை 392 ரூபாய் சரிந்ததால் நகைவாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

தங்கம் விலை நேற்று நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.392 குறைந்த காரணத்தால் ஒரு சவரன் ரூ.38,704 ஆக குறைந்துள்ளது.. முன்னதாக நேற்று முன்தினம் தங்கம் விலை ரூ.152 குறைந்து ரூ.38,920க்கு விற்பனையானது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. தங்கத்தின் விலையில் கடந்த இரண்டு நாளில் நல்ல சரிவு ஏற்பட்டுள்ளதால் நகை வாங்குவோர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தங்கம் விலை ஏற்றம் ஏன்

தங்கம் விலை அதிகரிக்கவும் குறையவும் முக்கிய காரணம், அமெரிக்க பொருளாதாரம், கச்சா எண்ணெய் மதிப்பு, தங்கத்தின் இறக்குமதி போன்றவை ஆகும். பொருளாதார மந்த நிலையின் போது மக்கள் பலர் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். அப்போது தங்கத்தின் விலை விறுவிறுவென அதிகரிக்கும். ஆனால் அமெரிக்க பொருளாதாரமும், கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்க தொடங்கினால் தங்கத்தில் செய்த முதலீட்டை எடுத்து அதில் போடுவார்கள் என்பதால் அப்போது சரசரவென குறையவும் செய்யும். ஆனால் பெரிய அளவில் தங்கத்தின விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக உயர்ந்து வருகிறது ஆறு மாதத்தில் 8 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் 32 ஆயிரமாக இருந்த தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதம் 43 ஆயிரம் என்கிற அளவிற்கு உயர்ந்தது

ரூ.43,328க்கு விற்பனை

தங்கம் விலை இந்திய வரலாற்றில் இல்லாத அளவாக ஆகஸ்ட் 7ம் தேதி அன்று ஒரு சவரன் ரூ.43,328க்கு விற்பனையானது. அதன் பிறகு தங்கம் விலை சரசரவென சரிந்தது. அடுத்த இரு மாதங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது 5 ஆயிரம் வரை குறைந்துளளது.

எவ்வளவு ஏற்ற இறக்கம்

கடந்த செப்டம்பர் 28ம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை 37920க்கு விற்பனை ஆனது. ஆனால் அடுத்த நாளே சுமார் 600 ரூபாய் அளவிற்கு உயர்ந்து 38500ஐ தொட்டது. அதன்பிறகு கொஞ்சம் ஏறுவது பின்னர் இறங்குவதுமாக உள்ளது, 300 முதல 400 ரூபாய் வரை ஏற்ற இறக்கங்களை தினசரி தங்கத்தின் விலை சந்தித்து வருகிறது.

சென்னை தங்கம் விலை

சென்னையில் அக்டோபர் 1ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ஒரு கிராம் 4,815க்கும், சவரனுக்கு 48 அதிகரித்து ஒரு சவரன் 38,520க்கும் விற்பனையானது. அடுத்த நாள் யாரும் எதிர்பார்க்காத வகையில், சவரனுக்கு 432 அதிகரித்து ஒரு சவரன் 38,952க்கும் விற்பனையானது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.38,920க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை சரசரவென குறைந்தது. சென்னையில் நேற்று காலை தங்கத்தின் விலை (ஒரு கிராமுக்கு ரூ.47 குறைந்து) சவரனுக்கு ரூ.376 குறைந்து ரூ.38,704க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை திடீரென தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்தது. அதாவது, காலையில் சவரன் ரூ. ரூ.4,838க்கு விற்பனையான நிலையில், நேற்று மாலை ரூ.4,836க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், நேற்று மாலையில் தங்கம் விலை ரூ.392 குறைந்து ரூ.38,688க்கு விற்பனையானது.

இன்று வெள்ளி விலை

இதனிடையே தங்கத்தை போல் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளியின் விலை கடந்த 12ம் தேதி கிலோ 66800க்கு விற்பனையானது. அடுத்த நாளில் 300 ரூபாய் சரிந்து 66 ஆயிரத்து 500 ரூபாயாக விற்பனையானது. நேற்றும் அதே விலையில் தான் விற்பனையானது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/gold-rate-today-in-chennai-22-carat-gold-rates-highly-surges-in-chennai-last-two-days-400474.html