சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதிப்பு
சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து 13,304 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா பாதித்தவர்களில் 1,69,890 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் 91 சதவீதம் பேர் குணமடைந்துவிட்ட நிலையில், 3473 பேர் அதாவது 1.86 சதவீதம் பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பரவல் குறைந்து வரும் சூழ்நிலையில், சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது பாதிப்பு சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு வாரத்துக்கு முன்பு வரை 10,000-க்கும் கீழ் குறைந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக 13,000-த் தாண்டியுள்ளது.
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தோர் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அண்ணா நகரில் 1,299 பேரும், கோடம்பாக்கத்தில் 1,198 பேரும், திருவிக நகரில் 1,082 பேரும், தேனாம்பேட்டையில் 1,138 பேரும், அடையாறில் 1,035 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்டலவாரியாக கரோனா பாதிப்பு
Source: https://www.dinamani.com/tamilnadu/2020/oct/16/chennai-corona-update-3486229.html