சென்னை: 2 ஏடிஎம் இயந்திரங்களுடன் மல்லுக்கட்டிய கொத்தனார் – லாக்கரை உடைக்க முடியாததால் தப்பிய பணம்! – Vikatan

சென்னைச் செய்திகள்

ஏடிஎம் இயந்திரம் கொள்ளை முயற்சி தொடர்பாக விசாரித்ததும், அந்த இளைஞர் அங்கிருந்து ஒட்டம் பிடித்தார். நடுரோட்டில் அவரை போலீஸார் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை ஆவடி ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் விசாரித்தபோது அவர் ஆவடி வீராபுரத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (27) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆவடி ரயில்வே போலீஸார் கூறுகையில், “ஹரிகிருஷ்ணன், கொத்தனார் வேலை செய்துவருகிறார். இவரின் மனைவியின் வீடு சென்னை பல்லவன்சாலை, காந்திநகரில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் அவரின் மனைவி இறந்துவிட்டார். அதனால், மனமுடைந்த அவர், மதுவுக்கு அடிமையானார். வேலைக்கும் சரிவரச் செல்வதில்லை.

ஹரிகிருஷ்ணன்

மது குடிக்க பணம் இல்லை என்றதும், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்கலாம் எனத் திட்டமிட்டு கத்தியோடு அங்கு சென்றிருக்கிறார். ஆனால், பணம் வைத்திருந்த லாக்கரை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்திருக்கிறார். ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்கும்போது ஷட்டரை அவர் பூட்டியிருக்கிறார். மேலும் ஏடிஎம் மையத்திலிருந்த அலராமும் வேலை செய்யவில்லை. அதனால் இரண்டு இயந்திரங்களையும் பொறுமையாக ஹரிகிருஷ்ணன் உடைத்திருக்கிறார். பணம் வைத்திருந்த லாக்கரை ரகசிய நம்பர் மூலம்தான் திறக்க முடியும். டிஜிட்டல் வசதிகொண்ட லாக்கரை ஹரிகிருஷ்ணனால் உடைக்க முடியவில்லை. அதனால் அதிலிருந்த லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்படவில்லை. முதல் தடவையாக ஹரிகிருஷ்ணன் கொள்ளை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் மீது இதற்கு முன் காவல் நிலையங்களில் வழக்குகள் இல்லை என்பதால் அவரைக் கண்டுபிடிப்பதில் சிரமங்கள் இருந்தன” என்றனர்.

சிசிடிவி பதிவுகள் ஸ்பெஷல் டீமின் போலீஸாரின் கையில் கிடைத்த இரண்டு மணி நேரத்துக்குள் ஹரிகிருஷ்ணன் சிக்கியிருக்கிறார். அதனால், ரயில்வே உயரதிகாரிகள் ஸ்பெஷல் டீம் போலீஸாருக்கு பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-avadi-police-arrested-youth-in-atm-attempt-theft