ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண்கள் அரசு பேருந்து மோதி பலி..! சென்னை பரபரப்பு – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை கிழக்கு தாம்பரம் வேளச்சேரி சாலையில் இன்று இரு சக்கர வாகனத்தில் இரண்டு பெண்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து வந்த வேகத்தில் அந்த இரு சக்கர வாகனத்தில் மோதியுள்ளது.

இதனால் நிலை தடுமாறி விழுந்த இரண்டு பெண்களும் பேருந்தின் சக்கரங்களில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள், கடைகள் என பரபரப்பாக இயக்கும் சாலை என்பதால் அரசு பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் சங்கர் அருகிலிருந்த காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து காவலர்கள் சாலையில் கூடிய மக்களை அப்புறப்படும் செயலில் ஈடுபட்டனர். இதற்கிடையில் குரோம்பேட்டை போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு வந்து இரன்டு உடல்களையும் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

‘அண்ணே கொஞ்சம் சைடிஷ் தரீங்களா’ அப்பாவி வாலிபரை அடித்துக்கொன்ற கும்பல்!

விசாரணையில், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் கலைவாணி (19), ரோஸ்லின் (20) என தெரிய வந்தது. தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள குரோம்பேட்டை காவல் துறையினர் டிரைவர் சங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலையூரில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து பலியான சம்பவம் சென்னையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.

Source: https://tamil.samayam.com/latest-news/crime/chennai-women-killed-after-a-government-bus-collided-with-a-two-wheeler/articleshow/78701525.cms