சென்னையில் தொடங்கியது மழைக்காலம்.. அதிகாலை முதலே வெளுக்கத் தொடங்கியது சூப்பர் மழை – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் கிண்டி, வடபழனி, தி.நகர், மாம்பலம் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதலே நல்ல மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் மற்றும் புதுவை காரைக்காலில் மழை பெய்யும் என்று கூறியிருந்தது. இதேபோல் சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூரில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டிருந்தது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கூறப்பட்டது.

வானிலை மையம் கணித்தபடியே சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதலே நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, வடபழனி, தி.நகர், மாம்பலம் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. விமான நிலையம், பல்லாவரம், தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளிலும், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களிலும் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-and-suburbs-have-scored-heavy-rains-between-3-5am-today-400656.html