டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை தோல்வி! | Delhi beat Chennai Super Kings – நியூஸ்7 தமிழ்

சென்னைச் செய்திகள்

ஷிகர் தவானின் அதிரடி சதத்தால் சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

சார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சாம் கர்ரன் மற்றும் டு பிளசிஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சாம் கர்ரன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்த நிலையில் அடுத்து வந்த ஷேன் வாட்சன், டு பிளசிஸ் உடன் ஜோடி சேர்ந்தார். 

இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்த நிலையில், வாட்சன் 36 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.  அரை சதமடித்து அசத்திய டு பிளசிஸ் 58 ரன்களில் அவுட்டானார். அணியின் கேப்டன் டோனி 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இறுதியில், சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய தவான் 101 ரன்களை குவித்தார். இறுதியில் டெல்லி அணி 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Source: https://ns7.tv/ta/tamil-news/sports/18/10/2020/delhi-beat-chennai-super-kings