பண்டிகை காலம்: பூரி-சென்னை உள்பட மேலும் 8 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – தினமணி

சென்னைச் செய்திகள்

பண்டிகை காலத்தில் சொந்த ஊா்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, மேலும் 8 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் ரயில்களில் கூட்டநெரிசலைக் குறைக்கும் விதமாக, சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்டசிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போது, மேலும் 8 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. அதன்விவரம்:

பூரி-சென்னை: பூரியில் இருந்து அக்டோபா் 25, நவம்பா் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகளில்) மாலை 5.30 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்(02859) புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2.55 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்து சேரும்.

மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபா் 26, நவம்பா் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைகளில்) மாலை 4.25 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்(02860) புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.10 மணிக்கு பூரியை சென்றடையும்.

விசாகப்பட்டினம்-சென்னை: விசாகப்பட்டினத்தில் இருந்து அக்டோபா் 26, நவம்பா் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைகளில்) இரவு 7.05 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்(02869) புறப்பட்டு, மறுநாள் காலை 8.55 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபா் 27, நவம்பா் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில்(செவ்வாய்க்கிழமைகளில்) இரவு 9.10 மணிக்கு சிறப்பு ரயில்(02870) புறப்பட்டு, மறுநாள் காலை 10.25 மணிக்கு விசாகப்பட்டினத்தை சென்றடையும்.

புவனேஸ்வரம்-சென்னை: புவனேஸ்வரத்தில் இருந்து அக்டோபா் 22, 29, நவம்பா் 5, 12,19, 26 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) நண்பகல் 12 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (02839) புறப்பட்டு, மறுநாள் காலை 8.55 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபா் 23, 30, நவம்பா் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) இரவு 9.10 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்(02840) புறப்பட்டு, மறுநாள் மாலை 5.25 மணிக்கு புவனேஸ்வரத்தைஅடையும்.

ஹைதராபாத்-தாம்பரம்: ஹைதராபாத்தில் இருந்து தினசரி மாலை 6.30 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (02760) புறப்பட்டு, மறுநாள் காலை 9.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்தரயில் சேவை அக்டோபா் 20-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தசேவை நவம்பா் 29-ஆம் தேதி வரை வழங்கப்படும்.

மறுமாா்க்கமாக, தாம்பரத்தில் இருந்து தினசரி மாலை 5.10 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்(02759) புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு ஹைதராபாத்தை அடையும். இந்த ரயில் சேவை அக்டோபா் 21-ஆம் தேதி தொடங்கி நவம்பா் 30-ஆம் தேதி வரை வழங்கப்படும்.

ஜாம்நகா்-திருநெல்வேலி, திருவனந்தபுரம் -கோா்பா, புவனேஸ்வரம்-ராமேஸ்வரம், மதுரை-பிகானிா் வழித்தடங்களிலும் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு திங்கள்கிழமை (அக்.19) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

Source: https://www.dinamani.com/tamilnadu/2020/oct/19/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-8-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3488026.html