சென்னையில் 61,235 காய்ச்சல் முகாம்கள் – 30 லட்சம் பேர் பங்கேற்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் 61,235 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது இதில் 30 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.

சென்னை,

சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை சென்னை மாநகராட்சியில் 61 ஆயிரத்து 235 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த காய்ச்சல் முகாமில் 30 லட்சத்து 83 ஆயிரத்து 190 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 609 பேருக்கு சளி, காய்ச்சல் அறிகுறி இருந்தது. இவர்களை பரிசோதித்ததில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 691 பேருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை முடிவில் இதுவரை 27 ஆயிரத்து 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 10-ந் தேதி முதல் மாலை நேர காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 9 ஆயிரத்து 508 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல்களை பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/Districts/2020/10/19041903/61235-fever-camps-in-Chennai–30-lakh-people-participate.vpf