சென்னை, புறநகரில் ஒரு மணி நேரம் வாட்டிய கனமழை: 6 செ.மீ. மழைப்பொழிவால் சாலைகளில் வெள்ளம் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை மற்றும் புறநகரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சென்னையின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம்போல் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

வெப்பச் சலனம், மேலடுக்குச் சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. காலை முதலே மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் சுமார் 3 மணி அளவில் தொடங்கிய மழை சென்னை முழுவதும் பரவலாகப் பெய்தது.

இதனால் சென்னை முழுவதும் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். தாழ்வான இடங்களில் சாலையில் வெள்ளம்போல் நீர் தேங்கியது. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மழை நீர் தேங்கியது.

ஒரு மணி நேரத்தில் 6 செ.மீ. மழை பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனம்பாக்கம் பகுதியில் 4 செ.மீ. மழையும், அண்ணா நகர், கே.கே. நகர் பகுதிகளில் 6 செ.மீ. வரை மழை பதிவானது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/593783-an-hour-of-heavy-rain-in-the-suburbs-of-chennai-6-cm-of-rain-flooded-the-roads.html